விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் விக்ரமின் 56 வது திரைப்படமாகும். இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த ட்ரைலரில் சீக்ரெட் போலீஸ் ஆபிஸராக இருக்கும் விக்ரம், வில்லன்களால் கடத்தப்படட அக்‌ஷராஹாசனை காப்பாற்ற செல்கிறார்.