அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்ஸர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய். ரித்திகா சிங், சஞ்சனா கல்ராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு (ஜுலை 4) திடீரென ‘பாக்ஸர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு.

‘பாக்ஸர்’ படத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்று நினைத்தோம். ஆனால் இணையத்தில் லீக்காகிவிட்டதால் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுவிட்டார்கள் எனத் தெரியவந்தது. மாலை 6 மணிக்கே வெளியானதால், அதைத் தடுக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. பெரும் வைரலாகிவிட்டது என அருண் விஜய் கூறியுள்ளார்.