ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’. படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்க ஸ்ரீநிவாஸ் ஆர். குதா ஒளிப்பதிவு செய்ய , ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்குகிறார். கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படம் வருகிற மே 31 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என கூறப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான ‘என்ஜிகே’வும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.