லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது தெரிந்த ஒன்றே. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நயன்தாரா.

அந்த வரிசையில், தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியான ரஜினியின் மனைவியாக நயன்தாரா நடிப்பதாக தகவல் கசிந்ததுள்ளது . ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நயன்தாராவின் வேடம் அமைந்திருக்கிறதாம்.

படத்தில் வில்லியே நயன்தாரா தானாம். அப்பா – மகள் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நயன்தாரா தான் வில்லியாம்.

அத்துடன், இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ‘பேட்ட’ திரைப்படத்தை போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்பார்’ அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.