ரஜினிகாந்த் நடித்த  கபாலி திரைப்படம்  வெளியான ஏழாவது நாளில் ரூ 389 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளதாக  தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
கபாலி திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு  பேசுகையில் “கபாலி வெளியாகிய ஏழு நாட்களில் ரூ.389 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. நூறு வருட சினிமா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனை” என்றார்.
thanu-28-1469722497
மேலும் அவர், “ வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 500 கோடி ரூபாயை எட்டிவிடும். மொத்தத்தில் கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்..