“கபாலி” துணை நடிகர்கள், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது!

Must read

கோலாலம்பூர்:
ஜினி நடித்த “கபாலி” திரைப் படத்தின் துணை நடிகர்களாக நடித்த இருவரை போதை மருந்து வழக்கில் மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலேசியாவிலுள்ள ஷா ஆலம் பகுதியில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர், அந்நாட்டு  காவல்துறையினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புச்சோங் மற்றும் சன்வே பகுதிகளில் திருடப்பட்ட சில பொருட்களை அடகு வைத்த ரசீதும் கைப்பற்றப்பட்டன.
31 மற்றும் 34 வயதுடைய இந்த இருவரும், கைது செய்யப்பட்ட போது போதை மருந்து உட்கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
ரஜினித் நடித்த கபாலி திரைப்படத்தில் படப்படிப்பபு மலேசியாவில் நடைபெற்ற போது, இருவரும் நடித்துள்ளனர். இவர்கள் இருவர் மீது  ஏற்கெனவே திருட்டு, போதை  பொருள் கடத்தல், உட்ப 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
“கபாலி” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது, அங்கு ரஜினிக்கும் படப்பிடிப்பு குழுவினருக்கும் பாதுகாப்பு அளித்த சில புள்ளிகளின் குற்றப் பின்னணி குறித்து ஏற்கெனவே பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டது குறிப்பித்தக்கது.

More articles

Latest article