:”கபாலி”க்கு பதிலாக வேறு திரைப்படம்!: துபாய் புகட்டும் பாடம்!

Must read

Rafeeq Sulaiman   அவர்களின் முகநூல் பதிவு:
 
download (1)
 
நேற்று  (துபாயில்) மிகுந்த ஆவலுடன் குடும்பத்துடன் கபாலி திரைப்படம் பார்க்கச் சென்ற என் நண்பருக்கு மிகுந்த ஏமாற்றம்.  அவரை அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை.
காரணம், தனது இரண்டு வயது மகனுடன் படம் பார்க்கச் சென்றதுதான். இந்தப் படம் 15+ தணிக்கைச் சான்றுடன் இங்கு திரையிடப்படுகிறது.
“அவனைத் தூங்க வைத்துவிடுவேன்; அவன் தூங்கிவிடுவான்.” என்று சொன்ன சாக்குப்போக்குகள், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் எடுபடவில்லை.
அவர் சொன்னது:
“உங்கள் பிள்ளை நலனுக்காகத்தான் இந்தக் கட்டுப்பாடு.  இந்த இளம் வயதில் பதியும் விசயங்கள் பசுமரத்தாணி போல நின்றுவிடும். படத்தில் நிறைய இரத்தமோடும் கோரமான சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அத்தோடு F**K போன்ற வார்த்தைப் பிரயோகங்களும் இருக்கிறது. எனவே கண்டிப்பாக அனுமதிக்கமுடியாது” என்று சொல்லிவிட்டார்.
அதுமட்டுமல்ல.. கபாலி படத்திற்கான முன் பதிவு செய்த டிக்கெட் மூலம் குழந்தைகளைக் கவரும் வண்ணம் தயாரிக்கப்பட்ட மற்றுமொரு திரைப்படத்திற்கு அனுமதித்திருக்கிறார்.
நாம்?

More articles

Latest article