ரஜினி & தானு
ரஜினி & தாணு

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் “கபாலி” இந்த திரைப்படத்தை வெளியிட்ட திருச்சி – தஞ்சை ஏரியாவில் கபாலி படம் திரையிட்ட வகையில் தியேட்டர்களுக்கு 1.75 கோடி ரூபாய் நஷ்டம். இது சம்பந்தமாக திருச்சி விநியோகஸ்தர் பிரான்சிஸ் கலைப்புலி தாணு அவர்களிடம் பலமுறை நேரில் சந்தித்து பேசியும் பணம் கொடுக்கவில்லையாம்.
பாதிக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் நேற்று காலை தாணுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஜாஸ் சினிமா நிறுவனத்திடம் இருந்து எனக்கு பணம் வர வேண்டி உள்ளது அப்பணம் கிடைத்தவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றேன், அப்போது செட்டில்மென்ட் எவ்வளவு என்பதை பேசி முடிவு செய்து கொள்ளலாம் என நேற்று மாலை கூறியுள்ளாராம் தானு. இது சம்பந்தமாக நடிகர் ‘ரஜினிகாந்தை சந்திக்கும் தீவிர‌ முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் பாதிக்கப்பட்ட திரையரங்க உறிமையாளர்கள்.
அப்போ 500 கோடி வசூலுன்னு சொன்னது..?