ஆமதாபாத்,
லக கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கபடி அணி.
3–வது உலக கோப்பை கபடி போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 12 அணிகள்  கலந்துகொண்டுள்ளன.

இங்கிலாந்து வீரரை மடக்கி பிடிக்கும் இந்திய அணியினர்
இங்கிலாந்து வீரரை மடக்கி பிடிக்கும் இந்திய அணியினர்

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை சந்தித்தது. இந்தியர்களின் விளையாட்டை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணியினர் திணறினர். இங்கிலாந்து அணியினரை பந்தாடிய இந்திய அணி அபாரமாக புள்ளிகளை வென்றெடுத்தது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான  பிரதீப் நார்வால் 13 புள்ளிகளும், அஜய் தாக்குர் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
ஆட்ட இறுதியில் இந்தியா 69–18 புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதில் ரைடு மூலம் 43 புள்ளிகளும், எதிரணியை ஆல்–அவுட் ஆக்கிய வகையில் 10 புள்ளிகளும் எடுத்து  4–வது வெற்றியின் மூலம் அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இந்திய கபடி அணியினர்
இந்திய கபடி அணியினர்

இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் (5 வெற்றி)  அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது தென்கொரிய கபடி அணி.
இந்திய அணி அரைஇறுதியில் ஈரான் அல்லது தாய்லாந்தை சந்திக்க வேண்டி வரும்.
ஏற்கனவே 2 முறை சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.