திரையரங்கில் இந்த வாரம் ரிலீசாகும் படங்கள் காத்துவாக்குல ரெண்டு காதல், ஆச்சார்யா, ரன்வே 34

காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

28 ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படம் இரண்டு பெண்களை காதலித்து இருவரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் கதாநாயகனின் முக்கோண காதல் கதை என்று சொல்லப்படுகிறது.

ஆச்சார்யா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஆச்சார்யா திரைப்படம் ஏப்ரல் 29 ம் தேதி திரைக்கு வருகிறது.

ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கொர்டலா சிவா இயக்கி இருக்கிறார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடக்கும் நக்சலைட்டுகள் தொடர்பான கதை ‘ஆச்சார்யா’.

ரன்வே-34

2015 ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஒரு விமானம் குறித்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் ரன்வே-34.

அமிதாப் பச்சன் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் அஜய் தேவ்கன்.

ரகுல் ப்ரீத் சிங் விமானியாக நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 29 ம் தேதி திரைக்கு வருகிறது.