ஜினி நடிக்க, பா.இரஞ்சித் இயக்கும் “காலா” திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

`கபாலி’ படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி – பா.இரஞ்சித் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

14 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் தன்னை அடிக்க வரும் ஒருவரை, ரஜினி உதைப்பது போன்ற காட்சி இருக்கிறது. பின்னணியில் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு காட்சி  சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது