2004 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி சங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் காதல்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமானார்கள் பரத் மற்றும் சந்தியா.

இந்த படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து கூடல் நகர் என்ற படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் காதல் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து பரத் மற்றும் சந்தியா இருவரும் சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் பரத். அதில் இதே நாள், 16 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 17, 2004. என் வாழ்க்கையை மாற்றிய நாள், காதல் என்னுடைய பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார் பரத். இதை பார்த்த ரசிகர்கள் காதல் 2 ஆ ? என்றும் கோலிவுட் ரசிகர்கள் விரும்பும் ஜோடி என்றும் கமெண்ட் செய்து பாராட்டினர்.