கோடை விடுமுறையில் ரிலீசாகும் அருள்நிதியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் ‘K13’….!

அருள்நிதியின் அடுத்தப் படம் ‘K13’. இதுவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் தான்.

அருள்நிதி, ஷராதா ஸ்ரீநாத், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் , ரூபன் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

‘K13’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான SP சினிமாஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் படத்தின் இசையை வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு, கோடை விடுமுறையில் படத்தையும் வெளியிட போகிறார்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: arulnihi, k 13, summer release, thriller
-=-