ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி ரிமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ஜோதிகா குத்து விளக்கு ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்  “தும்ஹாரி சுலு”. இந்த படத்தின் கதை தமிழில் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.  இந்த படத்தில் வித்யாபாலனின் கதாப்பாரத்தில் ஜோடிகா நடிக்கிறார். படத்தை, ஏற்கனவே மொழி படத்தை இயக்கிய ராதாமோகனே இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக  வித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 4ந்தேதி) தொடங்குவதாக ஏற்கனவே இயக்குனர் ராதாமோகன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை காற்றின் மொழி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. படத்தின் துவக்க விழாவில் ஜோதிகாரின் மாமனார்  நடிகர் சிவகுமார், ஜோதிகாவின் மாமியார் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் சென்னையில் நடைபெற இருப்பதாகவும், படத்திற்காக அனைத்து நட்சத்திரங்களும் மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.. இதன் காரணமாக வரும்  அக்டோபரில் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.