சென்னை: பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என திமுக வழக்கறிஞரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ குற்றம் சாட்டி உள்ளார்.

ஏற்கனவே பொன்முடி உள்பட  ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட  திமுக, அதிமுக அமைச்சர்கள்மீதான வழக்கு களை தாமாகவே  விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்மீது குற்றச்சாட்டுக்களை கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், தற்போது, பொன்முடி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் பொன்முடியின் எம்எல்ஏ பதவி உள்பட அனைத்து பதவிகளும் பறிபோயுள்ளன. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம்  என்று கூறினார்.

மேலும், பொன்முடிமீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கடந்த  ‘அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு  தொடரப்பட்டது என்றவர்,  விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் பொன்முடி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். வழக்கு தொடரப்பட்டபோது பொன்முடியிடம் வருமானத்துக்கு அதிகமாக வெறும் ரூ.4.8 லட்சம் மட்டுமே இருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,   நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த அதிமுக ஆட்சியின்போது,  சட்டத்துறை செயலாளராக இருந்ததை சுட்டிக்காட்டியதுடன்,  வாதாடியதாகவும்,சட்டத்துறை செயலாளராக இருந்தபோது பொன்முடி வழக்கில் சொத்துகளை முடக்க ஜெயச்சந்திரன் உத்தரவிட்ருந்தார், ஆனால், சொத்துகள் முடக்க உத்தரவிட்டதை  தான் சுட்டிக்காட்டியபோது நினைவில்லை என நீதிபதி ஜெயச்சந்திரன்  தெரிவித்ததாகவும், நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார்.  கூறினார்.

மேலும்,  நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று கூறிய என்ஆர். இளங்கோ,  ”இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்சினை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம் என தெரிவித்தார்.

ஒவ்வொரு விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல நீதிமன்ற விவகாரத்திலும் தற்போது நீதிபதிகளை மிரட்டும் போக்கும் விமர்சனம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், ஊழல் வழக்கு காரணமாக அமைச்சர் பதவியை இழந்த 3வது நபர் பொன்முடி…