டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் தலைமை நீதிபதி பதவியில், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை பணியாற்றுவார்.

உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக உள்ள யு.யு. லலித்  பதவிக்காலம் நேற்று (நவம்பர் மாதம் 8ந்தேதி) உடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று, குடியரசு தலைவரால், நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சந்திரசூட் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக மூத்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். டிஒய் சந்திரசூட்  உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி உள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில், மூத்த நீதிபதிகள் மத்தியஅரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.  இவரது பணிக்காலம் இரண்டு ஆண்டுகள் உள்ளது. வரும் 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

நீதிபதி சந்திரசூட் ஏற்கனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்டதுடன்,  ஆதார் கார்டு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் தேர்வு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை….

[youtube-feed feed=1]