ராஜமுந்திரி: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் ஆந்திர மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த வழியாக வரும்  9 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ஆந்திர மாநிலம்  ராஜமுந்திரி அருகே, சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா  சென்றபோது,  சரக்கு ரயிலின் கடைசி பெட்டி  இன்று அதிகாலை, பாலாஜி பேட்டை அருகே திடீரென தடம்புரண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

தற்போது அந்த பகுதியில் ஒரு பாதையில் மட்டும் ரயில் போக்குவரத்து நடைபெறும் நிலையில், 9 ரயில்களின் போக்குவரத்தை தற்காலிகமாக ரயில்வே ரத்து செய்துள்ளது.ராஜமுந்திரி பகுதியில் தடம்புரண்ட ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.