புவனேஸ்வர்

டிசாவில் நடந்து வரும் ஜூனியர் உலகக் கோப்பை  ஹாக்கி  போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன..   இதில் நேற்று நான்காவது அதாவது கடைசி கால் இறுதிப் போட்டி நடந்தது.   இந்த போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின    ஆரம்பம் முதலே போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

போட்டியின் 21 ஆம் நிமிடம் இந்திய அணி கோல் ஒன்றை அடித்து முன்னிலை அடைந்தது.  இதையொட்டி கோல் எண்ணிக்கையை சமன் செய்ய பெல்ஜியம் அணி கடும் முயற்சி செய்தது.    இருப்பினும் இந்திய அணியினர் பெல்ஜிய அணியைக் கோல் போட விடாமல் தடுத்து இறுதி வரை கோல் அடிக்க விடவில்லை.

ஆட்ட முடிவில் இந்திய அணி 1-0 என்னும் கோல் கணக்கில் பெல்ஜிய அணியைத் தோற்கடித்தது.  இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.   அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுடன் ஜெர்மனி  அணி மோத உள்ளது  ஜெர்மனி அணி பலம் வாய்ந்தது என்பதால் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.