ஜூனியர் வீரர்களின் வெற்றி தொடரும்….ராகுல் டிராவிட்

Must read

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெற்ற இந்த மகத்தான வெற்றி குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், ‘‘வீரர்களை நினைத்தும், அவர்களது கடின உழைப்பையும் நினைத்தும் பெரும் அடைகிறேன். வீரரகளின் நினைவுகளில் இது நீண்ட நாட்கள் நீடிக்கும்.

இதை விட சிறப்பான மற்றும் பெரிய அளவிலான வெற்றியை அவர்கள் எதிர்காலத்தில் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஊழியர்கள் உள்பட அனைவரும் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டனர். இளைஞர்களுக்கு எங்களால் முடிந்தவற்றை செய்தோம்’’ என்றார்.

ஜூனியர் அணி வீரர் பிரித்வி ஷா கூறுகையில், ‘‘எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து ஊழியர்களுக்கு இந்த பெருமை சேரும். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். ராகுல் டிராவிட் சிறப்பாக எங்களுக்கு வழிகாட்டினார்’’ என்றார்.

More articles

Latest article