1983ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர்,  முதன்முதலாக உலக கோப்பையை கைப்பற்றி இந்திய வரலாற்றில் முத்திரை பதித்தனர்.

கிரிக்கெட்டின் தாய்வீடு என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில்தான் 1983வது ஆண்டு 3வது உலக கோப்பை போட்டி நடைபெற்றது.  தற்போது 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் அங்குதான் நடைபெற்று வருகிறது.

1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போதுழ, அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து வெற்றிக்கோப்பையை தட்டி வந்தது.

இந்திய அணி முதன்முதலாக  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாத் தொடங்கியதும் 1932ம் ஆண்டு ஒரு ஜூன் 25ம் தேதிதான். அன்றைய தினம் லண்டன் லார்ஸ் மைதானத்தில் இந்தியா வின், மகாராஜாக்களையும் நவாப்களையும் உள்ளடக்கிய இந்திய அணி முதன்முதலாக ஆடியது. அதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணியினர் உலககோப்பை வென்றனர்.

ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராமன் தலைமையிலான கிரிக்கெட் அணியினர் 1979ம் ஆண்டு   உலக கோப்பை போட்டியில் பங்குகொண்டது. அப்போது, இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுக்க, இந்திய பேட்ஸ்மேன் கவாஸ்கர் அதிரடியாக ஆடினார். அந்த காலங்களில் 60 ஓவர்கள் போட்டிதான் நடைபெறும். அந்த 60 ஓவரிலும் அவுட் ஆகாமல் கவாஸ்கர் ஆடி 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசிவரை அவர் அவுட்டாகாமல் இருந்தது பெருமையாக பேசப்பட்டது. அப்போது இந்திய அணி 132/3 அடித்தது வரலாற்று சாதனையாக பேசப்பட்டது.

பின்னர் 1975, 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற  உலக கோப்பை  போட்டிகளில், அனைத்து நாட்டு அணிகளையும்  வென்று, மேற்கிந்திய தீவுகள் அணி பலமிக்க அணியாக உலக நாடுகளை மிரட்டி வந்தது. இந்த நிலையில், 1983ம் ஆண்டு மார்ச் மாதம் கயானாவில் நடைபெற்ற போட்டியில்,  இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு  282 ரன்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி  முதன்முதலாக மேற்கு இந்திய தீவு அணியை வீழ்த்தி சாதனை புரிந்தது. ஆட்டத்தின்போது, கவாஸ்கர் 90 ரன்கள் எடுத்து முதன்முறையாக அரை சதத்தை தாண்டி சாதனை படைத்தார். மேலும் ஆட்டத்தின்போது, 38 பந்தில் கபில்தேவ் 72 ரன்கள் எடுத்திருந்ததும் இந்தியாவின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக இந்தியா அணி மீதான நம்பிக்கை வளர்ந்தது. இந்திய அணி வீரர்களும் உலக கோப்பை போட்டியை எதிர்கொள்ள தயாரானார்கள்.  அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவுக்கு வெறும் 24 வயது மட்டுமே.  அவருடன் இருந்தவர்களும் 30வயதுக்கும் குறைவானவர்களே. அவர்கள் தங்களது துடிப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இதையடுத்து 1983ம் ஆண்டு லண்டனில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில்  8  அணிகள் கலந்து கொண்டன. ஜிம்பாப்வே அணி முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் கலந்துகொண்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் கலந்து கொண்டன. பி பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றிருந்தன.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவிலும் இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் பி பிரிவிலும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.இந்தியாவுக்கும் மேற்கு இந்திய தீவு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் போது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்க 262 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவு அணி  228 ரன்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

அதே போல் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத் தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனது முதல் முறை யாகும்.

இந்த நிலையில் ஜூன் 25ந்தேதி 1983ம் அண்டு இறுதிப்போட்டி தொடங்கியது. இந்தியா உலக கோப்பை பெற வேண்டும் என இந்தியர்கள் தங்கள் விருப்ப தெய்வங்களை பிரார்த்தனை செய்ய போட்டி ஆரம்பமானது.

ஆட்டத்தின்போது டாஸ் வென்ற  மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன்  கிளைவ் லயாட் (Clive Lloyd)  இந்திய அணியை பேட்டிங் செய்ய சொல்ல, தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஸ்கரும், சென்னை வீரர் ஸ்ரீகாந்தும் களமிறங்கினர். மேற்கு இந்திய தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ்  (Andy Roberts @  Jawbreaker)  வீசிய அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கவாஸ்கர் ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து  மொகிந்தர் அமர்நாத் களமிறங்கினார். மேற்கு இந்திய தீவு பவுலர்கள் ராபர்ட்டும், கார்னரும் மாறி மாறி பந்துக்களை வீச, அமர்நாத்தும், ஸ்ரீகாந்தும் அசராமல் நம்பிக்கை யோடு  பந்துகளை விளாசி வந்தனர். இதனால் கடுப்பான ராப்ர்ட் ஆக்ரோஷமாக பவுன்சர் வீச, அதை இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தூக்கி அடிக்க அது சிக்சருக்கு பறந்தது. இதைக்கண்ட அரங்கமே உற்சாகத்தில் அதிர்ந்தது.

இந்த நிலையில் 38 ரன்னில் ஸ்ரீகாந்த் வெளியேற, தொடர்ந்து அமர்நாத்தும் 26 ரன்னில் ஆட்ட மிழந்தார். அதையடுத்து களமிறங்கிய  சந்திப் பட்டேல் நிதானமாக ஆட, அவரும் 27 ரன்னில் வெளியேற இந்திய அணி தடுமாற தொடங்கியது.  இந்த நிலையில்,  54.4 ஓவர்களில் விக்கெட்டு களை இழந்து  இந்திய அணி  183 மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணியின் ஸ்கோரை வர்ணனையாளர்கள் உள்பட பலர் ஏளனமாக கிண்டல் செயது வந்தனர்.

இதையடுத்து, மேற்கு இந்திய அணி மட்டையுடன் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக கிரினிட்ஜ் (Greenidge) ஹேனஸ் களமிறங்கினர். தொடக்க ஓவர்களை  இந்திய பவுலர் பல்விந்தர்  சந்து  வீசினார். அவரது  பந்துக்கு கிரினிட்ஜ் (Greenidge) கிளின்போல்டு ஆக ஆட்டம் சூடு பிடித்தது. தொடர்ந்து கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் களமிறங்கினார்.  அவரது அதிரடி ஆட்டத்தை ஏற்கனவே பார்த்திருந்த இந்திய பவுலர்கள் திறமையாகவும், சரியான முறையிலும் பந்துகளை வீசினர்.

கபில், மதன்லால், ரோஜர் பின்னர் , அமர்நாத் என்று மாறி மாறி பந்து வீசினார்கள்.  இருந்தாலும், விவியன் ரிச்சர்ஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம்  7 பவுண்டரிகளை அடித்திருந்தார்.  இந்த நிலையில் ஹேனஸ் 12 ரன்னில் ஆட்ட மிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுக்கு 50 ரன்களாக இருந்து. தொடர்ந்து கிளைவ் லாய்ட் களமிறங்கினார்.

இந்த பரபரப்பான நிலையில், மதன்லால் பந்து வீச தொடங்கினார். அவரது பந்தை விவியன் ரிச்சர்ட்ஸ் ஓங்கி அடிக்க, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்திய அணி கேப்டன்  கபில்தேவ் பந்தை கேட்ச் பிடிக்கும் ஆவலில் பின்னாலேயே ஓடிச்சென்று எல்லைக்கோடு அருகே அலேக்காக கேட்ச் பிடித்தார். இதன் காரணமாக  ஆட்டத்தின் போக்கே மாறத் தொடங்கியது.

விவியன் ரிச்சர்ஸ் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். அவர்  அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கபில்தேவின் கேட்ச் வெகுவாக பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்தின் உலககோப்பை கனவு கலையத் தொடங்கியது.  தொடர்ந்து இந்திய பவுலர்களின் பந்துக்கு மேற்கு இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிய பரபரப்பாக ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

போட்டியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆர்வமுடன் பார்த்தும், வானொலி மூலம் கேட்டும் கொண்டிருந்த நிலையில், அனைவரிடமும் பரபரப்பு ஏற்பட்டது.  சரியாக இந்திய நேரப்படி இரவு 11.55 மணி அளவில்  அமர்நாத்தின் பந்து வீச்சில் மேற்கு இந்திய அணி வீரர் கோல்டிங் எல்பிடபிள்யு ஆகி களத்தை விட்டு வெளியேற இந்தியா உலக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை  வீழ்த்தி உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. இந்த ஆட்டத்தின்போது ஆட்ட நாயகனாக  மொஹிந்தர் அமர்நாத் தெரிவு செய்யப்பட்டார்.  ஜூன் 25, 1983 இந்தியாவின் வரலாற்றில் முத்திரை பதிக்கப்பட்ட நாள்.

2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது.

இந்திய அணியின் வெற்றி குறித்து கூறிய மேற்கு இந்திய தீவு அணி கேப்டன் விவியன் ரிச்சர்ஸ், லார்ட்ஸ் மைதானத்தின் இதமான தட்பவெட்பத்துக்கு ஏற்ப, இந்திய பந்து வீச்சாளர்கள் மதன்லால், ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத், பல்விந்தர் சந்து போன்றோர்  சிறப்பாக ஒத்திசைந்து பந்துக் களை வீசினர்.  மிதவேகமாக வீசும் அவர்கள் பந்து நன்கு ஸ்விங் ஆனது. எனவேதான் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பறிபோனது. பெரிதும் அறியப்படாத இந்திய அணி  சாம்பியனாக மாற,  நான் பெரிதும் வியக்கும் வீரரான கபில்தேவ், இந்திய அணியை உலக சாம்பியனாகவே மாற்றிக் காண்பித்தார். இந்திய வீரர்களுக்கு சுய நம்பிக்கையை ஊட்டியதே கபில்தேவ்தான் என்று புகழ்ந்து கூறினார்.

உலக கோப்பையுடன் இந்தியா திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியினருக்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

1983ம் ஆண்டு பெற்ற  வெற்றியை போலவே  இந்த ஆண்டும் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி  பெற வேண்டும்  என்பதே ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரின் கனவும்… கனவு மெய்ப்பட வேண்டும்….