றைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவரு மான ஜெயலலிதா முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (ஜூன் 24, 1991)

நடிகையாக காலத்தை தொடங்கிய ஜெயலலிதா எம்ஜிஆர் மீதான ஈர்ப்பால், 1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அமர்ந்த  185வது எண் கொண்ட  இருக்கை ஒதுக்கப்பட்டது.. தன் ஆங்கில புலமை யால் நாடாளுமன்றத்தை கலக்கிய ஜெயலலிதா  முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி உள்பட  பல தலைவர்களின் அன்பை பெற்றார்.

எம்ஜிஆர்  மறைவுக்குப் பிறகு, அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட் டார். இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991  ஜெயலலிதா  பணியாற்றியிருக்கிறார்.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று  ஜூன் 24, 1991ம் ஆண்டு முதல்முதலாக தமிழகத்தின் 2வது பெண் முதல்வராகவும், தமிழகத்தின் 11வது முதல்வராகவும்  ஜெயலலிதா பதவி ஏற்றார்.  அவருக்கு அப்போதைய கவர்னர்

இன்று அவர் முதன்முதலாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாள்.