நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்….ராகுல்காந்தி

டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் உள்ள புள்ளி விவரங்கள் முக்கியமானது. அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அவர்கள் நீதிபதி லோயா விவகாரத்தையும் எழுப்பியுள்ளனர். நீதிபதி லோயா இறப்பு குறித்து உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.

Tags: Judge's allegation threatens to democracy says Rahul Gandhi, நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்....ராகுல்காந்தி