cubygljukaacd9a

விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை தரக்குறைவாக பேசி அதில் விளம்பரமும் செய்து பிழைக்கும் தமிழ் டாக்கீஸ் BLUE SHIRT மாறன் மற்றும் பிராசாந்த் என்ற இருவர் மீது வழக்கு தொடர்ந்த J S K கோபி

சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை தரக்குறைவாக பேசி அதில் விளம்பரமும் செய்து பிழைக்கும் தமிழ் டாக்கீஸ் BLUE SHIRT மாறன் மற்றும் பிராசாந்த் என்ற இருவர் மீது J S K கோபி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த செயலுக்கு தயாரிப்பாளர் சங்கம் முழு ஆதரவு தருகிறோம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கு நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம்,பி ஆர் ஓ சங்கமும் இணைந்து ஆதரவு தெரிவித்து இருக்கிறது.வெகு விரைவில் இவர்களின் தரக்குறைவான தவறான விமர்சனங்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி J S K கோபி கூறுகையில்,

நான் திரைவிமர்சனங்களை எதிர்க்கவில்லை. விமர்சனம் என்பது அனைவருடைய உரிமை ஆனால் அதே சமயம் சமுக வளைதளமான YOUTUBE போன்றவைகளில் விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக நடிகர் நடிகைகளையும் இயக்குநர்களையும் மற்றும் டெக்னீஷீயன்களை விமர்சனம் செய்து மார்க் போட்டு அதில் நடுவே விளம்பரம் செய்து பிழைத்து அதே சினிமாவை கேவலமான முறையில் பேசும் ஒரு சில நபர்கள் மீதுதான் வழக்கு தொடர உள்ளேன்.இதற்கு தயாரிப்பாளர்சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், ,பி ஆர் ஓ சங்கமும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. .நிச்சயமாக YOUTUBEல் வரும் இது மாதிரியான அநாகரீகமான விமர்சனங்கள் விரைவில் நிறுத்தப்படும்.சமுகவளைதளமான YOUTUBE-ல் சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமா நடிகர் நடிகைகளையும் இயக்குநர் தொழில்நுட்ப கலைஞர்களையும் தரக்குறைவாக பேசி விமர்சித்து படம் ரிலீஸான முதல்நாளே அந்த திரைப்படத்தின் முழுக்கதையும் கூறி அந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தக்கும் பெரும் இழப்பீடு ஏற்படுத்தும் YOUTUBE-ல் செயல்படும் TAMILTALKIES ,IT’S PRASHANTHREVIEW இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளேன்.அதன் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதன் படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், ,பி ஆர் ஓ சங்கமும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி, விரைவில் இது மாதிரியான சினிமாவிற்கு இழப்பு ஏற்படுத்தும் YOUTUBE LEGAL அலுவலகம் உதவியுடன் அவர்களின் சேனலை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

unnamed-3 unnamed-4