லண்டன்: ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்பான  ‘சிங்கிள் டோஸ்’ டோஸ் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த  ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனா தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில்  அவசர கால பயன்பாட்டுக்காக உபயோகிக்க அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பம் செய்திருந்தது. இதை ஆய்வு செய்த மத்தியஅரசு, மற்றும் ஐசிஎம்ஆர், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் ஷாட்  கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து,  இங்கிலாந்து, மெக்சிகோ உள்பட பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால், பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க மறுத்ததால், இந்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இதையடுத்து, முந்தைய விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட அந்தநிறுவனம் பின்னர் மீண்டும் அனுமதி  கோரி புதிதாக விண்ணப்பத்திருந்தது.

இதை ஆய்வு செய்த இந்திய மருந்துக்கட்டுப்பாடு அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஜான்சன் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி வழங்க ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து,  இந்தியாவில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மன்சுக் மான்டவியா அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் ஏற்கனவே உள்நாட்டு தயாரிப்புகளான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து தற்போது ஜான்சன் நிறுவனத்தின் சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்…