டெல்லி: ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக்கோரி இந்திய அரசிடம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை, திரும்ப பெற்று விட்டதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஜான்சன் ஜான்சன் நிறுவன  தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனம்  இந்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும் பல நாடுகளில் இந்த தடுப்பூசியில் பிரச்சினை இருப்பதாக புகார்கள் எழுந்தது. அமெரிக்காவில் இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் சிலருக்கு சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில்,  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன  தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் எழுந்தது. மேலும், சிக்கிள் டோஸ் செலுத்தி கொள்வதால் பின்விளைவு ஏற்படும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்றும் கோரிக்கை வைத்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவில் பல சட்ட சிக்கல்கள் நிலவி வருகிறது.

இதுகுறித்து கூறிய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், “தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இழப்பீடு உள்பட சட்ட சிக்கல்கள் குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவினர்  ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இக்குழு ஆலோசனை மேற்கொள்ள இருந்தது. இந்த நிலையில்,  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுவிட்டதாக தெரிவித்து உள்ளார்.