திருச்சி :
மோடியின் பணமதிப்பு இறக்க அறிவிப்பால் வேலைவாய்ப்புகள் குறைந்தும், தொழில்களும் முடங்கி வரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. சொன்னாலே ஆச்சர்யமாக தான் இருக்கிறது. ஏடிஎம். பணம் எடுத்து தரும் வேலை. 200 ரூபாய் கூலி. இது எப்படி இருக்கு… இந்த கதையை பார்ப்போம்…
ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி மத்திய அரசு  அறிவித்தது.  வங்கிகளில் பணம் எடுப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பது அடியோடு முடங்கியது. பெரும்பாலான ஏடிஎம் மையங்களும் காட்சி பொருளாகத்தான் இருக்கிறது. ஒருசில ஏடிஎம்கள் மட்டும் செயல்படுவதால் ரூ.2,000 பணம் எடுக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. முதியவர்கள், ஓய்வூதியர்கள் ஏடிஏம்.ல் பணம் எடுக்க வரிசையில் நின்று மயங்கி விழும் சம்பவமும், உயிரை விடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. வியாபாரிகள் வரிசையில் நிற்பதால் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சதாரத். இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் கவரிங், பேஷன் நகைகள் வாங்கி, கடைகளுக்கும், வீடுகளில்  நேரிடையாக பெண்களிடமும் விற்பனை செய்தும் வருகிறார். கடைக்கு வேலைக்கு ஆட்கள் இல்லை. இதனால் அனைத்து வேலைகளையும் இவரே கவனித்து வந்தார். இவரது மகன் திருமணமாகி தனியாக வசிக்கிறார் வயதானதாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் சதாரத் அவதிபட்டு வந்தார்.
இதனால் தனியாக இருக்கும் இவர் பணத்தேவைக்காக ஏடிஎம் மையத்திற்கு சென்று நீண்டநேரம் வரிசையில் நின்று பணம் எடுக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். இதனால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வெறுத்துப்போன அவர். நேற்று தனது கடை முன்பு ஏடிஎம்.ல் பணம் எடுத்து கொடுக்க வேலைக்கு ஆட்கள் தவை என்ற விளம்பரத்தை ஒட்டினார். இந்த அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலையே தனது உறவினர் ஒருவர் மூலம் சேகர் என்பவரை  பணிக்கு சேர்த்துக்கொண்டார். இதையடுத்து அந்த விளம்பரத்தை உடனடியாக  அகற்றிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ஏடிஎம்.ல் பணம் எடுக்க பணம் எடுக்க சென்றாலே அரைநாள் ஆகிவிடுகிறது. குறைந்த அளவு பணம் எடுக்க முடியும் என்பதால் தொழில் பாதிக்கிறது. இதனால் ஏடிஎம்ல் பணம் எடுக்க தெரிந்தவர்களை இந்த பணிக்கு நியமிக்க முடிவெடுத்து இந்த விளம்பரத்தை கடையில் தொங்கவிட்டேன். அவர்களுக்கு  ரூ.200 வரை கூலியாக கொடுக்க உள்ளேன் என்றார்.
 
 
New Job Opportunity , Rs. 200 for withdrawing cash from ATM. Advertisement in Trichy.