சென்னை, 

சென்னையில் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஜூலை 4ம் தேதி (வியாழக்கிழமை)  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாநில தொழில் நெறிவழி காட்டும் மையம், ஏ– 28, முதல்தளம், டான்சிகார்ப்பரேட் வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை என்ற முகவரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திட இம்முகாம் நடத்தப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

பட்டயபடிப்பு, பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, செவிலியர் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். வேலைநாடுநர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (044– 22500134) வாயிலாகவோதொடர்புகொள்ளலாம்.

இதை  வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்புத்துறை ஆணையர் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய முதன்மை செயல்அலுவலர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.