இயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் ?: அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

Must read

ஸ்ரீநகரில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் உடனடியாக தங்களது பணிக்கு திரும்பும் படி, ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள உத்தரவில், “ஸ்ரீநகரில் பணிபுரியும் தாலுகா அளவிலான, மாவட்ட அளவிலான, ஸ்ரீநகர் தலைமை செயலகத்திற்குட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஊழியர்கள் அமைதியாகவும், எவ்வித சர்ச்சைகளும் இன்றி பணியாற்ற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மற்றொரு உத்தரவில், “சம்பா மாவட்ட அதிகாரியின் உத்தரவு படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டு, செயல்படலாம் என்கிற உத்தரவு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article