ராஞ்சி

ன்று காலை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் 19 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி 13 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இம்மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

இம்மாநில ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.  இதில் ஜாம்ஷெட்பூர்  கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் மாலை ஐந்து மணி வரையிலும் மற்ற 18 தொகுதிகளில் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு நக்கல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதிகளில் மட்டும் சுமார் 42,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  வாக்குப்பதிவு தொடங்கி இதுவரை அனைத்துப் பகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.