சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்களை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாரா?
அட்மிட்டாகும்போதே கடுமையான நுரையீரல் நோய்த் தொற்றும் இருதய கோளாறும் இருந்ததா?
அவரது உடலில் சர்க்கரையின் அளவு என்ன?
அப்படிப்பட்டவருருக்கு காய்ச்சல்-நீர்ச்சத்து குறைபாடு என்று மட்டும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்?
சிகிச்சையின்போது ஜெயலலிதா இயல்பு நிலையில் இருந்தாரா?
இடைத்தேர்தல் மனுவில் சுயமாக கைரேகை வைத்தாரா?
வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் கையெழுத்து போட்டாரா?
இட்லி-சாம்பார், தயிர்சாதம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிட்டாரா?
ஐ.சி.யூ.வில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாரா?
சர்க்கரை அளவின் காரணமாக அவரது கால்கள் பாதிக்கப்பட்டனவா?
மரணம் நிகழ்ந்த உண்மையான நேரம் எது?
அதன்பின் எவ்வளவு நேரம் கழித்து அறிவிக்கப்பட்டது?
இந்த விவகாரங்களை விசாரணை கமிஷன் ஆராயும் என தெரிகிறது.