சிறையில் சசிகலா பிறந்தநாள்! டிடிவி ஆசிபெறுகிறார்….

பெங்களூரு,

மிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்து ஆசி பெறுகிறார்.

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா வுக்கு இன்று பிறந்த நாள். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருப்பதாலும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாகவும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படாமல் தவிர்க்கப்பட்டு உள்ளது.

 

 

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று சசிகலாவை  சிறையில் சென்று சந்திக்கவுள்ளார். இதற்காக நேற்றே அவர் பெங்களூரு பறந்துவிட்டார். இன்று சிறையில், சசிகலாவை சிறையில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ஆசி பெறவும்,  அதிமுகவில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு இந்த பிறந்தநாள் வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாளாகும். ஜெயலலிதா வின் வாழ்த்தும், உறவுகளின் ஆசியும் இல்லாத பிறந்த நாளாக இந்தப் பிறந்த நாள் சிறையில் சசிகலாவுக்கு அமைந்துள்ளது.
English Summary
Sasikala birthday in prison today, ttv dinakaran will meet