மரணத்தால் மேலும் ஒரு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு!

Must read

டில்லி,

ஜெயலலிதா மீதான பரிசுபொருட்கள் மீதான வழக்கில், அவர் மறைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பரிசு பொருள் வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே மறைந்த  தமிழக முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜெயலலிதா பெய ரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போதைய தமிழக அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

செங்கோட்டையன் மீதான விசாரணை கோடைவிடுமுறைக்குப் பின்னர் தொடரும்  என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

1992ம் ஆண்டு  ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்தபோது, அவருக்கு வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு அளவுக்கு பரிசாக செக்குகள் வந்தன.  இதை அவர் தனது கணக்கில் வரவு வைத்துள்ளார்.

முதல்வராக இருப்பவர், தனக்கு வரும் பரிசு பொருட்களை  அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஜெ. அந்த பணத்தை அரசு கருவூலத் தில் செலுத்தாமல், தனது சொந்த பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினார்.

அதை எதிர்த்து அடுத்த திமுக ஆட்சியின்போது அவர்மீது வழக்கு தொடரப் பட்டது. அத்துடன் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களான  செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

அழகு திருநாவுக்கரசு  2015ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார். தற்போது  ஜெயலலிதாவும் மரணமடைந்து விட்டார். செங்கோட்டை யன் மட்டுமே தற்போது இருக்கிறார்.

இந்த வழக்கில் கடந்த 2006ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சிபிஐ-யால்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. கடந்த  சில ஆண்டுகளாக நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு  விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த விசாரணையின்போது, காலம் கடந்து தாக்கப்பட்ட வழக்கு, ஆகவே,  இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால் அவர் இருவரின் பெயரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும்,  செங்கோட்டை யன் மீதான விசாரணை மட்டும் தொடரும் என்று அறிவித்தனர்.

நீதிபதி பினாகி சந்திரகோஷ் விரைவில் ஓய்வு பெற இருப்பதால் இந்த வழக்கை மேற்கொண்டு புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

செங்கோட்டையன் தற்போது அதிமுக அவைத்தலைவராகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article