ஆர்.கே.நகரில் ஜெயலலிதா ‘பாடி’யுடன் ஓபிஎஸ் அணி அதிரடி பிரசாரம்!

Must read

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா உருவ பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தியது போன்ற உருவ பொம்பை  வைத்து ஓபிஎஸ் அணியினர் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், சசி அணியை சேர்ந்த டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதன், திமுகவில் மருது கணேஷ் மற்றும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, சுயேச்சைகள் என  ஒரு பட்டாளமே போட்டியிடுகிறது.

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் அணியினர் பணம், பரிசு பொருட்கள் கொடுத்து வாக்காளர்களை விலைபேசி வருகின்றனர். அவர்களது பணபலம் முன்பு மற்ற கட்சியினர் போட்டிபோட முடிய வில்லை.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜெயலலிதா இந்தபோது அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தது போலவே, அவரது இறந்த உடல்போன்ற உருவ பொம்மை தயார் செய்து, அதை பிரசார வாகனத்தில் எடுத்து சென்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

More articles

Latest article