தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. அத்துடன், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிறிய விவசாயிகளின் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டருந்து.
“கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.