துரை

கோவில் நகைகளை ஒவ்வொரு வருடமும் சரி பார்க்க வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழ் பல கோவில்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் பல கோவில்களில் நகைகள் காணாமல் போய் உள்ளதாகவும் அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதை ஒட்டி ஒரு பொதுநல மனு பக்‌ஷி சிவராஜன் என்பவரால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதியப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் சசிதரன் ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தது.

அந்த மனுதாரர் மற்றொரு மனுவில் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீராமநாத சாமி கோவிலில் கும்பாபிஷேகம் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கோவிலில் பல நகைகள் காணாமல் அல்லது திருடு போய் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்த கும்பாபிஷேகத்தை நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த அமர்வு கும்பாபிஷேகத்தை நிறுத்தி வைக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

முதல் மனுவில் பக்‌ஷி ராஜன் கடந்த 1972 ஆம் வருடம் நகைகள் பட்டியலில் காணப்பட்ட 12 நகைகள் அடுத்த பட்டியலான 1995 ஆம் வருட பட்டியலில் காணப்படவில்லை என்பதை சுட்டி காட்டி இருந்தார். அதை ஒட்டி நீதிமன்ற அமர்வு, “இந்துஅறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள தங்க, வைர நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தையும் இதற்கு முந்தைய பட்டியலுடன் சரிபார்க்க வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளது.