ஜெட் ஏர்வேஸ் : விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட விமானிகள்

Must read

ண்டன்

விமானத்தில் விமானி அறையில் இரு விமானிகள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

விமானத்தில் விமானம் செலுத்தும் இடம் காக் பிட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.    பொதுவாக விமானி ஒருவருடன் கோ பைலட் எனப்படும் மற்றொரு விமானியும் இருப்பார்.   அது போல வருடப் பிறப்பு அன்று லண்டனில் இருந்து மும்பை செல்ல ஒரு விமானம் தயாராக இருந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவந்த்துக்கு சொந்தமான இந்த விமானம் கிளம்பும் நேரத்தில் விமானிக்கும் மற்றொரு விமானிக்கும் விமானம் செலுத்தும் இடமான காக்-பிட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.    பிறகு மற்ற விமான ஊழியர்கள் இருவரையும் சமாதானப் படுத்தி விமானத்தை செலுத்த வைத்துள்ளனர்.

இந்த தகராறு குறித்து ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமையகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.   அதைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிட்ட நிர்வாகம்,  விசாரணை முடியும் வரை இரு விமானிகளையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது.  தகறாறுக்கான காரணம்  இன்னும் தெரியவில்லை.

More articles

Latest article