ந்தியாவில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பல இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சோமாலியா, புருனே போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்ட உள்ளது. மீறினால் 5ஆண்டுகள் சிறை என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, வட கொரியா, சவூதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழா டிசம்பர் 25 ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவுக்கு பல அரபு நாடுகள் பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளன. சோமாலியா அரசு தங்கள் நாடு முஸ்லீம் நாடு என்றும், அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் முஸ்லீம் நம்பிக்கையை அச்சுறுத்தி வருவதாக சோமாலியாவின் மத விவகார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் ஷேக் முகமது கெய்ரோ  தெரிவித்துள்ளார்.

அதுபோல புருனே நாட்டிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. புருனே நாட்டிலும், கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தங்கள் மத கொள்கைகளுக்கு ஒத்து வராத செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புருனே அரசு தெரிவித்துள்ளது. அதாவது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகொரியா, சவூதியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ள தகவல்கள் இப்போதுதான் வெளிஉலகத்துக்கு தெரிய வந்துள்ளன.

அரபு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு  அல் ஷபாப் என்கிற அல் கொய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பல இஸ்லாமிய நாடுகள்  தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வெளிநாட்டு  தூதர்கள் மற்றும் அரசு ரீதியிலான வெளிநாட்டு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்கள் வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் கொண்ணடாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கவோ, பள்ளிகளில் பரிசு பொருட்களை வழங்க வோ கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.