இன்று: 21.08.2016   
ம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்… புனிதன்!
* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். ‘காலுக்குச் செருப்புமில்லை… கால் வயித்துக் கூழுமில்லை… பாழுக்கு உழைத்தோமடா… பசையற்றுப் போனோமடா!’ என்ற இவரது பாட்டுதான் தமிழகத்தின் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!
* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?’ என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். ‘ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான், உழைக்க வேண்டியதுதான் சாக வேண்டியதுதான்’ என்று தயக்கம் இல்லாமல் பதில் கூறி பதவிகளைத் தட்டிக் கழித்தார்!
13938449_1143834709008164_6242491295844473899_n
வாழ்க்கை முழுதும் மக்களுக்காகவே உழைத்த, தோழர் ப.ஜீவா அவர்களின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவம்….
முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்துக்கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகிறார்.
“இங்கேதான் ஜீவாவின் வீடு இருக்கிறது!” என்று சொல்லப்படுகிறது.
“அவர் வீட்டுக்கு வண்டியை விடு!” என்கிறார் காமராஜர்.
மேடு பள்ளம் நிறைந்த, குறுகலான சந்து பொந்துகளின் வழியே சென்ற வண்டி, சிறிய குடிசை ஒன்றின் வாயிலி்ல் நிற்கிறது.
ஜீவாவை சந்தித்த காமரஜர், “இவ்வளவு சிறிய வீட்டில் இருந்து சிரமமப்படுகிறீர்களே.. எனது முதல்வர் கோட்டாவில் அரசு வீட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன். அங்கு வந்து இருங்கள்!” என்கிறார்.
அதற்கு ஜீவா சொல்கிறார்: “என் நாட்டு மக்கள் அனைவரும் அது போன்ற வசதியான வீட்டில் வாழும்போது, நானும் அது போன்ற வீட்டில் வசிக்க வருகிறேன்!”