டில்லி:

ஜே.இ.இ. மெயின் (JEE Advanced)  தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டள்ளது. தேர்வு முடிவுகளை அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங் களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இது ஜே.இ.இ. (மெயின்) முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வை ரூர்கி ஐஐடி நடத்துகிறது. ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள்  மட்டுமே, இந்த முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

இதில் 2019 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜனவரியிலும், ஏப்ரல் மாதத்திலும் இரண்டு‘ முறை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே நடைபெற்ற ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இருந்து மொத்தம் 2,45,000 பேர் வெற்றி பெற்றனர்

இதைத் தொடர்ந்து, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வானது, ரூர்கி ஐஐடி சார்பாக ஆன்லை தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது.  இதில் தேர்வு பெற்றாமல் மட்டுமே   என்.ஐ.டி., ஐஐடி உள்பட 23 ஐஐடி-க்களில் சேரமுடியும்.

கடந்த மே மாதம் நடைபெற்ற. ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என ரூர்கி ஐஐடி அறிவித்துள்ளது

இதன் தேர்வு முடிகள் www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று வெளியிடப்படும் என ரூர்கி ஐஐடி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு www.jeeadv.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.