டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.  அதற்கான இணையதளத்தை தெரிவிக்கப் பட்டுள்ளதுடன்,  விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐஐடி-களில் (IITs) இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஜேஇஇ தேர்வாகும். IIT ரூர்க்கி நடத்தும் இந்தத் தேர்வு மே 17, 2026 அன்று நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் 2.5 லட்சம் தரவரிசைக்குள் (Category wise) வரும் மாணவர்கள், இந்த இரு தாள்கள் கொண்ட (கட்டாயமான) கம்ப்யூட்டர் வழித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்,

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வு மே 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரை தாள் 1-ம், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி, கட்டணம், தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 (JEE Advanced 2026) தேர்வுக்கான பதிவு தற்போது தொடங்கி உள்ளது. தகுதியுடைய மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://jeeadv.nic.in/applicant என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம். இதற்கு மே 2ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விண்ணப்பக் கட்டணத்தைத் தேர்வர்கள் மே 4ஆம் தேதி இரவு 11.59 மணி வரை செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது சமூகப் பிரிவைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுப் பிரிவினர் 3,200 ரூபாய் செலுத்த வேண்டும், அதேபோல எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவு மாணவிகளும் 1800 ரூபாய் செலுத்தினால் போதும்.

இந்தக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் 5லட்சம் தரவரிசைக்குள் வந்த மாணவர்கள் மட்டுமே இந்த அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.‘

[youtube-feed feed=1]