சென்னை: சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி  திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார்.  அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல   அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம்  அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம்  தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின்  பிறந்தநாள் பிப்ரவரி 24ந்தேதி ஆகும். அன்றைய தினமே, ஜெ.நினைவிடம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திடீரென ஜனவரி 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 27ந்தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள சசிகலா, சிறை தண்டனை முடிந்து வெளியே வர இருக்கிறார். அன்றைய நாளில், ஜெ. நினைவிடம் திறப்பதாக அதிமுக அரசு அறிவித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரியில் திறக்கப்படுகிறது மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம்?

சசிகலா விடுதலையை ஆர்ப்பாட்டமாக வரவேற்க தயாராகும் அமமுக… ஆம்பூரில் அனுமதி கோரி விண்ணப்பம்…