ஜெயலலிதாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்..: கருணாநிதி பதில்

Must read

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆனந்தவிகடன் இதழுக்கு  அளித்த பேட்டியை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவற்றில் இருந்து சில கேள்வி – பதில்கள்..
ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டனவே?”
“ தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் மேலும் சில ஆண்டுகள் நம்மோடு இருந்திருந்தால், ஆணவக் கொலைகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாமல் போயிருக்குமோ?”
முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!”
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, ‘நானும் பிரார்த்திக்கிறேன்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?”
“பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”
ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?”
“நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை!”
–  இவ்வாறு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article