ஜெ். - ஓ.பி.எஸ்.
ஜெ். – ஓ.பி.எஸ்.

 
றைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான விமர்சனங்களில் ஒன்று, மதுவிலக்கை அமல் படுத்துவதில் அவர் ஈடுபாடு காட்டவில்லை என்பதும் ஒன்று.
ஆனால் மதுவுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்தார். ஆனால், அரசு நிதி நிலையை உத்தேசித்தே முழு மதுவிலக்கை அமல்படுத்த இயலாமல் இருந்தார்.என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்வது, “நீங்க நல்லா இருக்கணும்” என்ற திரைப்படத்தைத்தான்.
இது குறித்து அந்த பிரமுகர்கள் கூறுவது இதுதான்:
“1991ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா.  அவர் உத்தரவின் பேரில், தமிழக அரசின் நிதி உதவியுடன் உருவான படம்தான் “நீங்க நல்லா இருக்கணும்” திரைப்படம்.
மதுவின் கொடுமையை விளக்கும் சமூக சீர்திருத்தப்படமாக இது உருவானது. 1992ஆம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படத்தை, விசு இயக்கத்கினார்.  நிழல்கள் ரவி, பானுப்ரியா,  மனோரமா, சந்திரசேகர் ஆகியோர்  நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்
மதுவினால் உண்டாகும் தீமைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.
சிறந்த சமூக கருத்துடைய திரைப்படத்திற்கான தேசிய விருதினை  பெற்றது.  இத்திரைப்படம் தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்தது. அதாவது தமிழக அரசு நிதி உதவி அளித்த முதல் திரைப்படம் இது.
இந்தத் திரைப்படத்தில் முதல்வராகவே தோன்றிய ஜெயலலிதா, மதுவின் தீமையை விளக்கி சிறப்பாக உரையாற்றினார்.
இதிலிருந்தே மதுவுக்கு எதிரான அவரது மனநிலை புரியும். இறுதிக்காலத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவரப்போவதாக அறிவித்தார்.  அதன் ஆரம்பமாக, மதுக்கடை திறக்கும் நேரத்தை காலை பத்து மணியில் இருந்து 12 மணிக்கு மாற்றினார்.
ஜெயலலிதாவின் இறுதி ஆசை முழு மதுவிலக்குதான். அவரது இறுதி ஆசையை, தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிறைவேற்ற வேண்டும்!” என்கிறார்கள் அந்த பிரமுகர்கள்.
நிறைவேற்றுவாரா  புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்?