modi-jaya
மிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு 75 நாட்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) இரவு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து இவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
ஜெயலலிதா ஸ்ரீரங்கத்து ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது குல வழக்கப்படி, போயஸ் இல்லத்தில் சடங்குகள் செய்யப்பட்டன.
பிறகு, ராஜாஜி ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இப்போதுவரை, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தில், இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தற்போது ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் துவங்கியிருக்கிறது.
இதற்கிடையே முக்கிய பிரமுகர்கள் சிலர், “அவரது உடலை, குல வழக்கப்படி எரிக்க வேண்டும். அதை விடுத்து புதைப்பதா” என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் சிலர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் இது குறித்து தங்கள் ஆதங்கத்தை மெயிலில் அனுப்பியினர்.
22
இந்துத்துவ பிரமுகர் நம்பி நாராயணனும் இதுபற்றிய தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.
“ஜெயலலிதா முழுமையான மதநம்பிக்கையுள்ள இந்துவாகவே வாழ்ந்து மறைந்தார்.  இந்து மத சடங்குகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆகவே,அவரது, குல வழக்கப்படி ஜெயலலிதா உடலை எரிப்பதுதான் முறை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டில்லி பிரமுகர்கள் ஆலோசனை நடத்தினர். பிறது, தங்களிடம் ஆதங்கத்தைத் தெரிவித்த முக்கிய பிரமுகர்களிடம், “ஜெயலலிதாவின் உடலை அவரது குல வழக்கப்படி எரிப்பதுதான் முறை.  ஆனால் ஜெயலலிதா, வெகுகாலம் தன் (அண்ணன்) குடும்பத்தினரை பிரிந்தே இருந்தார். ஆகவே அவருக்கு துணையாக இருந்தவர்களின் விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும்.
மேலும், எரிப்பது என்று வந்தால், யார் இறுதிச் சடங்கு (கொள்ளி வைப்பது) என்ற விவாதம் வரும். அது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் தமிழகத்தை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவர் மீது மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு அவரது இறுதிச் சடங்குக்கு கூடியுள்ள லட்சக்கணக்க மக்களே சாட்சி.
ஆகவே மக்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கின்போது எந்தவித விவகாரமும் வேண்டாம்” என்று மேலிட பிரமுகர்கள் தகவல் அளித்ததாக சிலர் தெரிவித்தனர்.
ஆக ஜெயலலிதாவின் உடலை நல்லடக்கம் செய்வது (புதைப்பது)  என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.