ஜெயலலிதா (ஜெயராம்) வாழ்க்கை வரலாறு

Must read

 
தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா. உடல்நலமில்லாமல் நம்மை பிரிந்தார்.
இருந்தாலும் தமிழர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார். அவரது ஒருசில செயல்கள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதில் வியப்பேதுமில்லை.
அவருடைய வாழ்க்கை வரலாறை சற்றே பின்னோக்கி பார்ப்போம்…
yound-jeya
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கியவர் ஜெயலலிதா.
தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட தலைவர்களுள் ஒருவராக ஜெ.ஜெயலலிதா  வரலாற்றில் இடம்பெறப்போகும் மாபெரும் தலைவர். அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி காண்போம்.
‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப் படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக கர்நாடக மாநிலம் மைசூரில் அவதரித்தார்.
1948ம் ஆண்டு பிப்ரவரி 24ந்தேதி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
மறைந்த முதல்வரின் குடும்பம் மைசூர் அரச வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.
ஆனால் அவர்களின் முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அதனால் ஜெயலலிதா எப்போதும் தன்னை ஒரு தமிழ்பெண் என்றே கூறி வந்தார்.
ஜெயலலிதாவின் இரண்டாவது வயதிலேயே அவரது தந்தை ஜெயராம் மரணத்தை தழுவினார்.
அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார்.
பெங்களூரில் தங்கியிருந்த போது சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார்.
jeylaalitha-old3
அவரது அம்மா சந்தியா நாடக துறையில் நடித்து புறழ்பெற்றவர். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால்  சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.
சென்னையிலுள்ள பிரபலமான ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது  ஆரம்ப கல்வியை மீண்டும் தொடங்கினார்.  தனது குழந்தை பருவத்தி லிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார்.
ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்கள் வைத்திருந்தது. குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது சிறிய தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார்.
முதன்முதலாக ஒரு ஆங்கில படத்தில்தான் ஜெயலலிதா நடித்ததாக கூறப்படுகிறது. ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதன்பிறகுதான் மாநில மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனது 15 வது வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது. ஆனால் அந்த படம் வந்ததும், போனதும் தெரியாமல் மறைந்துவிட்டது.
ஜெயலலிதாவின் முதல் இந்திய படம், 1964ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.
16
ஒரு வருடம் கழித்து,  பிரபல தமிழ் பட இயக்குனர் ஸ்ரீதர் எடுத்த  “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படம் மூலமாக தமிழக திரையுலகில் தனக்கென்று தனி பாதையை தொடங்கினார். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நடித்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றி பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது.
திரையுலகின் பிற்பகுதியில் அவர் ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற கதாநாயகர்களுடன் பல படங்களுன் இணைந்து நடித்துள்ளார்.
1968ல், அவர் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980ல் வெளியான  “நதியை தேடி வந்த கடல்” இருந்தது.
அதே ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதாவை அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக நியமித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது.
நாடாளுமன்றத்தில், அவரது அசாத்தியமான ஆங்கில பேச்சால் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் பாராட்டை பெற்றார்.
jeya-last
பின்னர், அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். அவருக்கு கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் அதிமுகவிற்காக பிரசாரம் செய்து நாட்டு மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த்ர்.
இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது,  ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.
எம்ஜிஆர் மரணத்தின்போது, அவரது உடல் அருகே இறுதி வரையில் இருந்து, அவர்மீது உள்ள தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.
ஆனால், எதிர்பாராத விதமாக கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், எம்ஜிஆரின் மனைவி  ஜானகி ராமச்சந்திரன்  கட்சியின் முக்கிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு, முதல்வராகவும் சில காலம் பணியாற்றினார்.
 
இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது.  ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும்.
இதன்காரணமாக அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனாலும் ஜெயலலிதா தனக்கு ஒதுக்கப்பட்ட சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சில இடங்களை கைப்பற்றி, தமிழக மக்கள் மனதில் நானும் இருக்கிறேன் என்று நிருபித்துகாட்டினார்.
பின்னர் இரண்டாக பிரிந்த அதிமுக கட்சி, ஒன்றானது. இதையடுத்து, 1989ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், மக்கள் மனதில் இடம்பிடித்து நடைபெற்ற தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக பதவி வகித்தவர்.
அவர், 1991, 2001, 2011, 2016  மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று, முதல்வர் பதவியை அலங்கரித்தவர் ஜெயலலிதா.
jayalalitha-with-pen-e1412770082757
அவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், மக்கள் அவர் மீது வைத்துள்ள பற்றால் மீண்டும், மீண்டும் ஆட்சி தலைமைக்கு வழி வகுத்தது.
அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது.
அதேநேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமை, வன்முறை, மற்றும் ஊழலை நீக்க மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.
அவரது, கடுமையா உழைப்பால், தமிழகத்தில் காவிரி பிரச்சினை, பெரியார் அணை பிரச்சினை போன்றவற்றில் அவரது கடுமையான நிலைப்பாடு மக்கள் மனதில் அவருக்கு நீங்கா இடத்தை வழங்கி உள்ளது.
இருந்தாலும் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டால், அவர் மனம் தளராமல் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் தேர்தலில் போடியிட்டு முதல்வராக பதவி வகித்தார்.
தமிழகத்தின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த ஜெயலிதா கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, மீண்டும் திரும்பி வருவார் என்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணத்தை தழுவினார்.
அவர் இறந்த நாளானா  5  டிசம்பர் 2016 தமிழக மக்களுக்கும் இருண்ட நாள் என்பதே உண்மை.
1
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991வரை பணியாற்றியிருக்கிறார்.
தமிழக முதல்வர்
ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை – தமிழகத்தின் 11 வது முதல்வர்.
மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை – தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை – தமிழகத்தின் 14 வது முதல்வர்.
மே 16, 2011 முதல் செப்டம்பர் 27, 2014 வரை – தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது),
மே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதல்வர்
மே 23, 2016 முதல் இன்று வரை தமிழகத்தின் 19 வது முதல்வர்
 
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article