சென்னை:
சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, முழுமையாக குண் அடைந்துவடிட்தாகவும் தீபாவளி அன்று மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பும் அவரை வரவேற்க ஒரு லட்சம் குதிரைப்படையும், மருத்துவமனையில் இருந்து போயஸ் இல்லம் வரை சரவெடி தயாராக இருப்பதாகவும் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா - கருணாஸ்
ஜெயலலிதா – கருணாஸ்

இது குறித்து கருணாஸ் தெரிவித்துள்ளதாவது:
“சமூகவிரோதிகள் சிலர் தமதிழக முதல்வர் உடல் நலன் பற்றி வதந்திகளை பரப்பினர். அவை அனைத்தையும் முறியடித்து முழு ஆரோக்கியம் பெற்றுவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தீபாவளி அன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.
அவரை வரவேற்ற ஒரு லட்சம் குதிரைப் படை வீரர்களை திரட்டி தயாராக வைத்திருக்கிறோம். மேலும் முதல்வருக்கு யானைகள் மாலையிட்டு வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, அப்போல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வரின் போயஸ் கார்டன்  இல்லவம் வரை விடாது வெடிக்கும் சரவெடிகள் ஆர்டர் கொடுக்கப் பட்டுள்ளது. இது உலக சாதனையாகும்” என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.