மிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜூரம் என்பதுபோல் செல்லப்பட்டது. பிறகு நோய்த்தொறறு இருப்பதாக தெரிவித்தார்கள். அவர் கண்விழிக்கவில்லை என்றும் செய்திகள் வந்தன.
அவரது பொறுப்புகள் ஓபிஎஸ் வசம் மாற்றப்பட்டது. பிறகு  அவர் பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன.  அரவக்குறிச்சி வேட்பாளர் அங்கீகார கடிதத்தில் கைரேகை பதித்தார். அதை பற்றியும் விமர்சனம் எழுந்தது.
0
இந்த நிலையில் ஐம்புது நாட்களுக்கு பின் ஜெயலலிதா போனில் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அதிமுக அமைப்புச்செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு தனது கையெழுத்திட்ட இரங்கல் அறிக்கையை ஜெயலலலிதா வெளியிட்டார்.
மேலும்  விசாலாட்சி நெடுஞ்செழியன் மகன் மதிவாணன், “போனில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா  எனது தாயாரின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆக, ஐம்பது நாட்களுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா போனில் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.