ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் சசி உதவியாளர் ‘பென் டிரைவ்’ ஒப்படைப்பு

Must read

சென்னை: 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து ஆணையத்தில் இருந்து வெளியே வந்த கார்த்திகேயன்,  விசாரணை ஆணையத்தில் பென் டிரைவர் கொடுத்திருப்பதாகவும், அதில் 24 வீடியோக்கள் உள்ளதாகவும் கூறினார். அந்த வீடியோவில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியவர்களைப் பற்றிய 24 விடியோக்கள் உள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை ஆணையத்திடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

More articles

Latest article