ஜெ. மரணம்: விசாரணை கமிஷன் எதிர்த்த அப்பீல் மனுவும் தள்ளுபடி!

Must read

டில்லி:

றைந்த முன்னாள் முதல்வர் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.

இந்த விசாரணை கமிஷனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த மனுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை கமிஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த கமிஷன் 3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த விசாரணை கமிஷன் முறையாக அமைக்கப்படவில்லை; சட்டசபையைக் கூட்டித்தான் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால் இம்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே  தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தேவையில்லை என டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

More articles

Latest article