வதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்! விஜயகாந்த்

Must read

சென்னை,
முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான ஒன்று தான். அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள விஜயகாந்த்,
actor_vijayakanth_stills_07
தனது உடல்நிலை பற்றி முதல்வர் ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்தால், அவரை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும், வதந்திகள் மேலும் பரவுவதற்கு இடமளிக்காமல் வாக்களித்த மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தமது உடல்நிலை குறித்து விளக்கம் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் மீது உடனே கவனம் செலுத்த முடியாத நிலையில் அரசு உள்ளதாக விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆளுநர் வித்யாசாகர், முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்ததாக தந்த அறிவிப்பை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்,  புதியதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிய ஜெயலலிதா,  தற்போதோ மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றியிருப்பது வேதனையான விஷயம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article